Aubervilliers-யில் நடந்த துப்பாக்கிச்சூடு.. ஒருவர் பலி!

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்சின் Aubervilliers நகரில் நடந்து துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டார்.

நேற்று இரவு Aubervilliers-யின் Rue des Ouvrieres Pivereuses வீதியில் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அப்பகுதியினர் உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு பொலிசார் வந்தபோது நபர் ஒருவர் துப்பாக்கி குண்டு தாக்கியதில் உயிரிழந்துள்ளார். மேலும் ஒருவர் காயமடைந்திருக்கிறார்.

உயிரிழந்த நபரின் சடலத்தை மீட்ட பொலிசார், காயமடைந்த நபரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து அவர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பண கொடுக்கல் வாங்கல் பிரச்னை காரணமாக இச்சம்பவம் நடந்துள்ளதாக தெரிவித்தனர்.

இதற்கிடையில், துப்பாக்கிச்சூடு நடத்திய ஆயுததாரிகள் தப்பியோடியுள்ளனர். அப்பகுதியில் 20 பொலிசார் குவிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்த நபர் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers