பிரிஜிட் மேக்ரானை அவமதித்த பிரேசில் ஜனாதிபதி: ட்விட்டரில் உருகும் பிரேசில் மக்கள்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானின் மனைவி பிரிஜிட் மேக்ரானின் தோற்றத்தை, வயதை, அவமதிக்கும் வகையில் பிரேசில் ஜனாதிபதி வெளியிட்ட பேஸ்புக் இடுகை ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பிரேசில் ஜனாதிபதியின் இளம் மனைவியின் படத்தையும் பிரிஜிட் மேக்ரானின் படத்தையும் அருகருகேபோட்டு, இப்போது புரிகிறதா ஏன் பிரான்ஸ் ஜனாதிபதி பிரேசில் ஜனாதிபதியை துன்புறுத்துகிறார் என்று? என்று கூறும் ஒரு இடுகையை, பிரேசில் ஜனாதிபதியின் அபிமானி ஒருவர் வெளியிட, அதற்கு பிரேசில் ஜனாதிபதி Bolsonaro, அந்த ஆளை அவமதிக்காதீர்கள், ஹாஹா என்று நக்கலாக விமர்சித்திருந்தார்.

இது மேக்ரானுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்திய நிலையில், அவர், பிரேசில் மக்கள் நல்லவர்கள், அவர்கள் தங்கள் ஜனாதிபதியின் நடக்கையைப் பார்த்து வெட்கப்படுவார்கள், விரைவில் அவர்களுக்கு தனது பதவிக்கு தகுதியுடையவரான ஒரு ஜனாதிபதி கிடைப்பார் என்று நம்புகிறேன் என்று கூறியிருந்தார்.

இந்த செய்தி பிரேசிலிலும் வைரலாக பரவிய நிலையில், பிரேசில் நாட்டவர்கள் பலர், ட்விட்டரில் தங்கள் ஜனாதிபதி நடந்து கொண்ட விதத்திற்காக வருத்தம் தெரிவித்துள்ளதோடு, மன்னிப்பும் கோரியுள்ளார்கள்.

ஒருவர் வெளிப்படையாகவே, எங்கள் ஜனாதிபதிக்காக வருந்துகிறேன், அவர் ஒரு முட்டாள் என்று ட்வீட் செய்ய, மற்றொருவர், இந்த முட்டாள் ஜனாதிபதி எல்லா பிரேசில் மக்களையும் பிரதிநிதித்துவப் படுத்துவதில்லை, நாங்கள் வெட்கப்படுகிறோம் என்று கூறியிருந்தார்.

ஒருவர், மன்னிக்க வேண்டும் பிரான்சின் முதல் பெண்மணி அவர்களே, முதலாவது எனக்கு பிரெஞ்சு மொழி தெரியாது, ஆனால் மிகவும் பிடிக்கும், இரண்டாவது நான் இந்த ஜனாதிபதிக்கு வாக்களிக்கவும் இல்லை, நாங்கள் இப்படி ஜனாதிபதி இருப்பதற்காக அழுது கொண்டிருக்கிறோம், நீங்கள் ஒரு அற்புதமான பெண்மணி, உங்கள் கணவர் ஒரு அருமையான மனிதர் என்று ட்வீட் செய்திருந்தார்.

ஒருவர் ஒரு படி மேலே போய் பழிக்குப் பழி என்பது போல, மேக்ரானின் படத்தையும், Bolsonaroவின் படத்தையும் அருகருகே போட்டு ஒப்பிட்டுள்ளார்.

இதேபோல் ஏராளமான ட்வீட்கள் மூலம் பிரேசில் மக்கள் பிரிஜிட் மேக்ரானுக்கு தங்கள் ஆதரவை தெரிவிக்க, அந்த செய்தி அவரை எட்டியதும், தனக்கு ஆதரவாக பிரேசில் மக்கள் அனுப்பியுள்ள செய்திகளால் தான் மிகவும் நெகிழ்ந்து போனதாக தெரிவித்துள்ளார் அவர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்