பிரான்சில் இந்த மாகாணத்தை விட்டு வெளியேற துடிக்கும் மக்கள்... எந்த இடம் தெரியுமா?

Report Print Santhan in பிரான்ஸ்

பிரபல நிறுவனம் நடத்திய ஆய்வொன்றில் இல் து பிரான்சுக்குள் வசிக்கும் மக்களில் அதிகமானோர் அப்பகுதியை விட்டு வெளியேற ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

Cadremploi எனும் நிறுவனம் நடத்திய ஆய்வில் பத்தில் எட்டு பேர் இந்த சிந்தனை இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Île-de-France மாகாணத்துக்குள் இருந்து மொத்தமாக 82 வீத மக்கள் வெளியேற ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

இவர்கள் Bordeaux அல்லது Nantes நகரில் குடியேற ஆசைப்படுவதாகவும், இவர்களில் 54 சதவீதம் பேர் Bordeaux நகரில் வாழ ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளனர். இந்த பட்டியலின் இரண்டாவது இடத்தில் Nantes நகரம் உள்ளது.

இந்த கருத்துக்கணிப்பு ஜூலை மாதத்தில் 1,302 பேரிடம் எடுக்கபப்ட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்