பிரான்சின் Hauts-de-Seine நகரில் 7 சிறுவர், சிறுமியரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக, செஞ்சிலுவை சங்கத்தின் பயிற்சிவிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த பத்து ஆண்டுகளாக செஞ்சிலுவை சங்கத்தில், தன்னார்வ தொண்டராக பணியாற்றி வரும் 37 வயது நபர் ஒருவர், 17-19 வயதுக்குட்பட்ட 7 சிறுவர்-சிறுமியரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.
Hauts-de-Seine நகரில் செஞ்சிலுவை சங்கத்தின் பயிற்சிவிப்பாளராகவும் உள்ள குறித்த நபர், சிறுவர்கள் மீது பாலியல் தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளார்.
இவர் மீது குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து பொலிசார் அவரை கைது செய்துள்ளனர். ஜூன் மாத நடுப்பகுதியில் இவர் இச்செயலில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் இதுதொடர்பாக செஞ்சிலுவை சங்கத்தின் தரப்பில் கூறுகையில்,
‘இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறுவது மிக அரிதான ஒன்று. 18,000 ஊழியர்களும், 60,000 தன்னார்வல தொண்டர்களும் இருக்கும் இதுபோன்ற சமூக அமைப்பில், இச்சம்பவம் இடம்பெறுவது மிகவும் கண்டிக்கத்தக்கது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.