செப்டம்பர் மாதத்தில் பிரான்சில் நிகழவிருக்கும் மாற்றங்கள்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

ஒவ்வொரு மாதத்தின் துவக்கமும் பிரான்சில் சில மாற்றங்களைக் கொண்டுவரும். அவ்வகையில் செப்டம்பர் முதல் திகதியிலிருந்து நிகழவிருக்கும் மாற்றங்களைக் காணலாம்.

எரிவாயு விலை குறைப்பு

பிரான்ஸ் எரிவாயு வழங்கும் நிறுவனமான Engie, ஆகத்து மாததை ஒப்பிடும்போது எரிவாயு கட்டணத்தில் அதிலிருந்து 0.9 சதவிகிதம் குறைக்க முடிவு செய்துள்ளது.

நீங்கள் சமையலுக்கு மட்டும் எரிவாயுவை பயன்படுத்தினால், உங்கள் எரிவாயு கட்டணத்தில் 0.2 சதவிகிதம் குறையும்.

அதேநேரத்தில், நீங்கள் சமையலுக்காகவும், தண்ணீரைக் கொதிக்க வைப்பதற்காகவும் எரிவாயுவை பயன்படுத்தினால் உங்களுக்கான எரிவாயு கட்டணம் 0.5 சதவிகிதமும் குறைய இருக்கிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக, வீட்டை வெப்பப்படுத்துவதற்காக எரிவாயுவை பயன்படுத்துவோருக்கு கணிசமான அளவில் கட்டணம் குறைய இருக்கிறது.

அதாவது அவர்களுக்கு எரிவாயு கட்டணம் ஒரு சதவிகிதம் குறைய இருக்கிறது.

வருவாய்க்கு ஏற்ற அளவு வரியில் மாற்றம்

உங்கள் குடும்பச் சூழலில் விவாகரத்து போன்ற ஏதேனும் மாற்றமோ, உங்கள் வருவாயில் குறைவோ ஏற்பட்டிருந்தால், 2019 முழுவதும் உங்கள் வருவாய்க்கு ஏற்ற அளவு வரியில் எந்த மாற்றமும் இருக்காது.

’மாற்ற பிரீமியம்’ பெறுவதற்கு கடினமான கட்டுப்பாடுகள்

செப்டம்பர் 1 முதல், செப்டம்பர் 2019க்கு முன் பதிவு செய்யப்பட்ட எந்த டீசல் காரானாலும் ’மாற்ற பிரீமியம்’ பெறுவதற்கு தகுதிபெறாது.

இந்த நிதியுதவி, குறைந்த வருவாய் உள்ளவர்கள் தங்கள் பழைய கார்களை மாற்றி, குறைந்த மாசு ஏற்படுத்தும் கார்களை வாங்குவதற்கு உதவுவதற்காக வழங்கப்பட்டது. ஆனால் ஆகத்து மாதம் இந்த உதவியை பெறுவதற்கான விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டன.

ஏனென்றால், இந்த திட்டத்துக்காக 600 மில்லியன் யூரோக்கள் பட்ஜெட் போடப்பட்ட நிலையில், செலவு 900 மில்லியன் யூரோக்களாகிவிட்டது.

மூன்று வயதிலிருந்தே சிறுவர் சிறுமியருக்கு கட்டாயக் கல்வி

1882ஆம் ஆண்டிலிருந்து பிரான்ஸ் சிறுவர் சிறுமியருக்கு ஆறு வயதிலிருந்து கல்வி கட்டாயம் ஆகும்.

ஆனால் 2019 செப்டம்பர் ஒன்றிலிருந்து அது மூன்று வயதாக குறைக்கப்படுகிறது. தங்கள் 3 வயது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் தங்களுடன் வைத்திருக்க விரும்பும் பெற்றோர், அதற்கு தனியாக அனுமதி பெற வேண்டும்

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்