பிரான்ஸில் மர்ம நபர்கள் கத்திக்குத்து தாக்குதல்.... ஒருவர் பலி! 8 பேர் காயம்

Report Print Vijay Amburore in பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டில் இரண்டு மர்ம நபர்கள் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் பலியானதோடு, 8 பேர் காயமடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் லியோன் நகரத்தில் மர்ம நபர்கள் இரண்டு பேர் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உள்ளூர் தகவல்களின்படி, நகரின் கிழக்கே உள்ள வில்லூர்பேன் பிராந்தியத்தில் லாரன்ட்-பொன்னேவே மெட்ரோ நிலையத்திற்கு அருகே நடைபெற்றதாக தெரியவந்துள்ளது.

இதில் ஒருவர் பலியானதோடு, பொதுமக்களில் சிலர் காயமடைந்திருப்பதாக தெரியவந்துள்ளது. சம்பவத்தில் ஈடுபட்டதாக ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மற்றொரு நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டு வருகிறது. பொதுமக்களை அப்புறப்படுத்தி பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்