சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்ளும் பிரேசில் ஜனாதிபதி: இம்முறை என்ன செய்தார் தெரியுமா?

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்ஸ் ஜனாதிபதியின் மனைவியை அவமதித்து சர்ச்சையை ஏற்படுத்திய பிரேசில் ஜனாதிபதி சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொண்டுள்ளார்.

பேஸ்புக்கில் தனது மனைவியின் படத்தையும் பிரிஜிட் மேக்ரானின் படத்தையும் அருகருகே பதிவிட்டு அவமதித்த பிரேசில் ஜனாதிபதியின் செயல் அவரது நாட்டிலேயே அவருக்கு விமர்சனங்களைக் கொண்டு வந்தது.

அத்துடன் பிரேசில் மக்கள் இமானுவல் மேக்ரானிடம் சமூக ஊடகங்களில் மன்னிப்பும் கேட்டார்கள்.

இவ்வளவுக்குப் பிறகும் தனது நிலைப்பாட்டிலிருந்து மாறாத பிரேசில் ஜனாதிபதியான Bolsonaro, பிரான்ஸ் தயாரிப்பான Bic வகை பேனாக்களை இனி பயன்படுத்தப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

முக்கிய அரசு ஆவணங்களில் கையெழுத்திட அவர், Bic வகை பேனாக்களை பயன்படுத்துவதுண்டு.

இனி அவ்வகை பேனாக்களை பயன்படுத்தப்போவதில்லை என வழக்கம்போல பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.

இனிமேல் Bic வகை பேனாக்கள் கிடையாது, ஏனென்றால் அவை பிரான்ஸ் நாட்டு தயாரிப்பு என்றார் அவர்.

அவர் வேடிக்கையாகச் சொல்கிறாரா, அல்லது சீரியஸாக சொகிறாரா என்று கேட்டதற்கு, பதிலளிக்க மறுத்துவிட்டார் Bolsonaro. பிரேசிலில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான Bic பேனாக்கள் பிரான்சில் தயாரிக்கப்படுபவை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers