இமானுவல் மேக்ரானுக்கு மிரட்டல்: தொடர்ந்து பிரான்சை வம்புக்கிழுக்கும் பிரேசில்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

சமீபத்தில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானின் மனைவியை, பிரேசில் ஜனாதிபதி அவமதித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய பின்னரும் பிரேசில் அடங்கியபாடில்லை.

ஏற்கனவே பிரேசில் மக்களிடம் அவர்களது ஜனாதிபதியான Bolsonaroவின் மதிப்பு குறைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

என்றாலும் பிரேசில் இமானுவல் மேக்ரானுக்கு எதிராக சொற்போரை தொடர்கிறது. சமீபத்தில் பிரேசிலின் சுற்றுலாத்துறை தூதரும், MMA வீரருமான Renzo Gracie, இமானுவல் மேக்ரானை கழுத்தை நெறித்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

மோசமான வார்த்தைகளால் அவரது ஆண்மையைக் குறித்து விமர்சித்துள்ள Renzo, மேக்ரானின் மனைவியை ஒரு டிராகன் என்றும் விமர்சித்துள்ளார்.

அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், பிரேசில் மக்களின் மனங்களிலும், பிரேசில் அதிபரின் மனதிலும் மட்டும்தான் இப்போது தீ எரிகிறது என்றார் அவர்.

அதாவது அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ குறித்து மேக்ரான் விமர்சித்ததற்கு எதிராக இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் Renzo.

மேக்ரானை கோமாளி என்று அழைக்கும் Renzo, நீ இங்கே வந்தால் உன் கழுத்தை நெறித்து விடுவேன், என்னை முட்டாளாக்காதே என்கிறார்.

இந்த கோமாளிகள் கூட்டம் எங்கள் காடுகளில் தீ எரிவதாக பொய்யான தகவல்களை பரப்புவதால், எங்கள் நாட்டின் சுற்றுலாத்துறை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது என்று கூறியுள்ள Renzo, மேக்ரானின் ஆண்மை குறித்தும் மோசமான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார்.

நான் ஒரு கேள்வி கேட்கிறேன், அவரது மனைவி அழகாக இருக்கிறாரா, அசிங்கமாக இருக்கிறாரா? என்று கேட்கும் Renzo, பிரிஜிட் ஒரு டிராகன், ஒரு டிராகனுடன் தூங்குவதால், மேக்ரான் ஒரு தீயணைப்பு நிபுணராகி விட முடியுமா? அவர் அசிங்கமாக இருக்கிறார் பிரதர் என்று கூறி பிரிஜிட் மேக்ரானை மீண்டும் அவமதித்துள்ளார் அவர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers