பாரிஸ் இரவு விடுதியில் அளவுக்கு அதிகமாக மது அருந்திய இளைஞருக்கு நேர்ந்த கதி!

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்சின் பாரிஸ் நகரில் உள்ள இரவு விடுதி ஒன்றில், அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.

பாரிசின் 12வது வட்டாரத்தில் Dehors Brut எனும் இரவு விடுதி உள்ளது. இந்த விடுதிக்கு நேற்றைய தினம் 21 வயது இளைஞர் ஒருவர் கொண்டாட்டத்திற்காக சென்றுள்ளார். அங்கு அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் குறித்த இளைஞர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அதனைத் தொடர்ந்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக விடுதிக்கு விரைந்த அவர்கள், குறித்த இளைஞருக்கு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். 15 நிமிடங்கள் வரை முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் அந்த இளைஞர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். அதிகளவில் மது உட்கொண்டிருந்ததாலேயே மருத்துவ சிகிச்சை எதுவும் பலனளிக்கவில்லை என்று மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers