பிரான்சில் குளிர்சாதன வாகனத்தில் கடத்தப்பட்ட அகதிகள் கைது !

Report Print Abisha in பிரான்ஸ்

குளிர்சாதன கொள்கலன் கொண்ட வாகனம் ஒன்றில் 13 அகதிகள் கடத்தப்பட்ட நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரான்ஸ்சில், Val-de-Marne மாவட்டத்தில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. செவ்வாய்க்கிழமை நண்பகலுக்கு சற்று முன்னதாக Rungis நகரில் வைத்து காவல்துறையினர் சோதனையின் போது குறித்த வாகனத்தை கண்டுபிடித்துள்ளனர்.

உடனடியாக சாரதி கைது செய்யப்பட்டதோடு, வாகனத்தில் மறைந்திருந்த 13 அகதிகளும் மீட்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சாரதி போலந்து நாட்டு குடியுரிமை கொண்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வாகனம் பா-து-கலே நகரில் இருந்து வந்திருந்ததாகவும், மீட்கப்பட்ட அகதிகள் சிரியா மற்றும் ஈராக் நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகின்றது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers