பிரான்ஸ் நாட்டுக்கு சுற்றுலா சென்ற பிரித்தானியர்: காரின் பொருட்கள் வைக்கும் பெட்டியில் இருந்து வெளிப்பட்ட மர்மநபர்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டுக்கு சுற்றுலா சென்று திரும்பிய ஒரு பிரித்தானிய தம்பதியின் காரின் மேல், பொருட்கள் வைக்கும் பெட்டியிலிருந்து மர்ம நபர் ஒருவர் வெளியே வருவதைக் கண்டு அதிர்ந்தனர் அந்த தம்பதியர்.

பிரான்சுக்கு சுற்றுலா சென்ற Newburyயைச் சேர்ந்த Simon Fenton (57), ஆகத்து மாதம் முழுவதும் பிரான்சிலுள்ள Dordogneஇல் தன் மனைவியுடன் செலவிட்டார்.

தன் மனைவி Sally (57) மற்றும் அவர்களது நாயுடன் பிரான்சின் கிராமப்புறப்பகுதிகளில் மலையேற்றம் சைக்கிள் ஓட்டுவது என நேரத்தை செலவிட்டார் Simon.

Calaisஇலுள்ள Le Meurice ஹொட்டலில் தங்கினாலும், அவரது கார் மிக உயரமாக இருந்ததால், ஹொட்டலுக்கு வெளியில்தான் காரை விட வேண்டி வந்தது. பின்னர் கடந்த சனிக்கிழமை, தம்பதியர் Newburyயிலுள்ள தங்கள் வீட்டுக்குத் திரும்பினார்கள்.

வீட்டில் வந்து காரை நிறுத்திவிட்டு களைப்பு மேலிட Simon வீட்டுக்குள் சென்று அமர, திடீரென அவரது மனைவி Sally பயந்து கூச்சலிடும் சத்தம் கேட்டு மீண்டும் ஓடி வந்திருகிறார்.

அப்போது தங்கள் காரின் மேல் பகுதியில் பொருட்கள் வைக்கும் பெட்டிக்குள்ளிருந்து, ஒரு பாதம் எட்டிப்பார்ப்பதைக் கண்டு அதிர்ந்து, தம்பதியர் பொலிசாரை அழைத்திருக்கிறார்கள்.

பொலிசார், அந்த பெட்டிக்குள்ளிருக்கும் நபரிடம் துப்பாக்கி ஏதாவது இருக்கலாம், அதனால் சற்று தள்ளியே நில்லுங்கள் என எச்சரித்திருக்கிறார்கள்.

பொலிசார் வந்து அந்த பெட்டியை திறக்க, உள்ளேயிருந்து ஆறடி உயரத்தில் 17 வயதுடைய ஒரு இளைஞர் வெளியே வந்திருக்கிறார்.

பொலிசார் அவரை கைது செய்து விசாரித்ததில், அவர் எகிப்திலிருந்து வருவதாகவும், அவரும் அவரது நண்பர்களும் இந்த காரை பார்த்ததும் அதை பயன்படுத்தி பிரித்தானியாவுக்குள் நுழைய திட்டமிட்டதாகவும் தெரிவித்துள்ளார் அந்த இளைஞர்.

அத்துடன் தன்னுடன் வந்த நண்பர்கள், பெட்டிக்குள் இருந்த ஷூக்கள், கெமரா முதலான பொருட்களையும் Simonஇன் நாயையும் திருடிச்சென்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார் அவர். பொலிசார் அந்த இளைஞரை கைது செய்ய, புலம்பெயர்தல் துறை அதிகாரிகள் அவரை விசாரித்துவருகிறார்கள்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்