நிர்வாண ஓட்டப்பந்தயத்திற்கு அழைப்பு விடுத்த அமைப்பு: ஆதரவைக் கண்டு மிரண்டுபோன ஒருங்கிணைப்பாளர்கள்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சில் நிர்வாண ஓட்டப்பந்தயத்திற்கு அமைப்பு ஒன்று அழைப்பு விடுத்துள்ள நிலையில், அதற்கு குவிந்துள்ள ஆதரவைக் கண்டு, அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் மிரண்டுபோயுள்ளார்கள்!

எனவே அவர்கள் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்வதற்கான விதிமுறைகளைக் கடுமையாக்கியுள்ளார்கள்.

The Hauts-de-France Naturistes என்னும் அமைப்பு, முதன்முறையாக இந்த பந்தயத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

பேஸ்புக்கில் விடுக்கப்பட்ட அந்த அழைப்பு குறித்த இடுகை 600,000 முறை பார்க்கப்பட்டுள்ளது.

இந்த அழைப்பிற்கு இந்த அளவு வரவேற்பு கிடைக்கும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள் அந்த அமைப்பினர்.

உள்ளூர் அதிகாரிகள் வர இருக்கும் கூட்டத்தைக் குறித்து இப்போதே கவலைப்பட ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்த ஓட்டப்பந்தயம், செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி, ஞாயிறு நண்பகல் 12 மணிக்கு தொடங்க உள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers