கால்பந்து போட்டியின்போது தவறான தேசிய கீதம்: இருமுறை சொதப்பிய பிரான்ஸ்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சில் கால்பந்து போட்டியின் போது, தவறான தேசிய கீதம் ஒலிக்கச் செய்யப்பட்டதையடுத்து 10 நிமிடங்கள் தாமதமாக தொடங்கியது.

சனிக்கிழமை பிரான்சில் தேசிய விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற ஐரோப்பிய சாம்பியன் கால்பந்து போட்டிகளின்போது, பிரான்சை எதிர்த்து ஆடும் நாடான அல்பேனியாவின் தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு பதிலாக அண்டோராவின் தேசிய கீதம் ஒலிக்கச் செய்யப்பட்டது.

வீரர்கள் தவறான தேசிய கீதம் ஒலிப்பதைக் கேட்டு திகைக்க, அல்பேனிய ரசிகர்கள் கோபத்தில் கொந்தளித்தனர்.

தவறை அறிந்து சரியான தேசிய கீதத்தை கண்டு பிடித்து ஒலிக்கச் செய்வதற்குள் 10 நிமிடங்கள் போய்விட்டது.

அதற்கு பிறகு மீண்டும் ஒரு தவறைச் செய்தார் அறிவிப்பாளர். அர்மீனிய ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகவும், இப்போது அர்மீனிய தேசிய கீதம் இசைக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

பின்னர் அவர் தனது தவறை உணர்ந்து, அல்பேனியா என்று திருத்திக் கொண்டார். இப்படி ஒரு மகா சொதப்பலுக்குப் பிறகு, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தன்னிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டதாக அல்பேனிய பிரதமர் தெரிவித்தார்.

அவர் வெளியிட்டுள்ள ட்வீட் ஒன்றில், ‘எங்கள் தேசிய கீதம் தொடர்பாக நடந்த தவறுக்கு மேக்ரான் மனதார மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்’ என்று தெரிவித்துள்ளார்.

அல்பேனியாவை நான்குக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் வென்ற பிரான்ஸ், நாளை அண்டோராவை எதிர்த்து ஆட உள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers