பெண்ணை ஹொட்டல் அறைக்கு அழைத்து வந்த நபர் மாரடைப்பால் மரணம்: நீதிமன்றம் அளித்த வித்தியாசமான தீர்ப்பு!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

வேலைக்காக சென்ற இடத்தில், ஹொட்டல் அறைக்கு இளம்பெண் ஒருவரை அழைத்து வந்த ஒருவர், அந்த பெண்ணுடன் பாலுறவு கொண்டபின் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

பாரீஸை தலைமையிடமாக கொண்ட ரயில் கட்டுமான நிறுவனம் ஒன்றிற்காக மத்திய பிரான்சில் பணி புரிந்தவர் Xavier X.

பொறியாளரான Xavier, ஒரு நாள் உள்ளூர் இளம்பெண் ஒருவரை அவர் ஹொட்டல் அறை ஒன்றிற்கு அழைத்து வந்துள்ளார்.

இருவரும் பாலுறவு கொண்ட சிறிது நேரத்தில் Xavierக்கு மரடைப்பு ஏற்பட்டு, மரணம் அடைந்திருக்கிறார் அவர்.

Xavier குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரி வழக்கு தொடர்ந்த பிரான்ஸ் பணியாளர் துறை அதிகாரிகள், அவரது மரணத்தை பணியின்போது மரணம் என கருதி, மரணத்தின் பலன்களை, அதாவது அவரது ஊதியத்தின் 80 சதவிகிதத்தை அவரது ஓய்வூதிய வயது வரை அவரது குடும்பத்துக்கு வழங்க வேண்டும் என்று கோரினர்.

அப்படி செய்வதால், Xavierஇன் ஓய்வூதியமும் அவரது குடும்பத்திற்கு கிடைப்பதற்கும் அது வழிவகுக்கும்.

ஆனால் Xavier பணி செய்த நிறுவனம், அவர் சம்பவத்தின்போது, தனக்கு நிறுவனம் ஒதுக்கிய ஹொட்டல் அறையில் இல்லாமல், வேறொரு ஹொட்டலில் உள்ளூர் பெண் ஒருவருடன் தங்கியிருந்ததால், அவர் பாலியல் தொழிலாளியுடன் இருந்ததாக கருதவேண்டும் என்றும், அவரது மரணத்திற்கும் அவரது வேலைக்கும் தொடர்பில்லை என வாதிட்டது.

ஆனால் அந்த வாதங்களை எந்த நீதிமன்றமும் ஏற்றுக்கொள்ளவில்லை. நிறுவனத்தின் மேல் முறையீடுகளும் பலனளிக்கவில்லை.

ஒரு பணியாளர் வேலை நிமித்தம் பயணம் செய்கிறார் என்றால், அவருக்கு அவரது நிறுவனம்தான் பொறுப்பு என்று நீதிமன்றங்கள் கூறிவிட்டன.

எனவே Xavierஇன் மரணத்தை பணியின்போது மரணம் என்று கருதி, பலன்களை அவரது குடும்பத்தாருக்கு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers