பிரான்சில் அதிகரிக்கும் பொலிஸ் அதிகாரிகளின் தற்கொலை..! வெளியான அதிர்ச்சி தகவல்

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்சில் காவல்துறை அதிகாரிகள் தற்கொலை செய்துகொள்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது என உள்துறை அமைச்சர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

பிரான்ஸ் உள்துறை அமைச்சர் Christophe Castaner, காவல்துறை அதிகாரிகளின் தொடர் தற்கொலை குறித்து தகவல் வெளியிட்டுள்ளார்.

அதன்படி, கடந்த ஆண்டு பிரான்சில் மொத்தம் 35 காவல்துறை அதிகாரிகள் தற்கொலை செய்துகொண்ட நிலையில், இந்த ஆண்டில் இதுவரை 48 காவல்துறை அதிகாரிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதன்மூலம் இந்த ஆண்டு நிறைவடைவதற்குள், கடந்த ஆண்டின் மொத்த எண்ணிக்கையை இது கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்துறை அமைச்சர் Christophe Castaner, அதிகாரிகளின் தற்கொலைகளை தடுப்பதற்காக 24 மணிநேர தொலைத்தொடர்பு சேவையை ஆரம்பித்திருந்தார்.

அதன்மூலம், தொலைபேசி அழைப்புகளின் ஊடாக அழைக்கும் அதிகாரிகளுக்கு மனநல சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும், ஏப்ரல் மாதத்தில் இருந்து இதுவரை 950 அதிகாரிகளுடன் இதுபோன்று சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், காவல்துறை அதிகாரிகளுக்கு ஊதிய உயர்வினை ஏற்படுத்தியுள்ளதாகவும், அதற்காக 250 மில்லியன் யூரோக்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers