பிரான்ஸில் 6 மணி நேரத்திற்குள் மூன்று இடங்களில் நடந்த சம்பவம்... பொலிசார் விசாரணை

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்ஸ் தலைநகரில் ஆறு மணி நேரத்திற்குள், மூன்று இடங்களில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

தலைநகர் பாரிசின் 8-ஆம் வட்டாரத்தில் கடந்த திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் இரண்டு கனேடிய தம்பதியை சுற்றி வளைத்த இரண்டு பேர் அவர்களிடமிருந்து €10,000 மதிப்புள்ள விலையுயர்ந்த கடிகாரங்களை திருடிச் சென்றுள்ளனர்.

இதைத் தொடர்ந்து இரவு 9.50 மணிக்கு இரண்டாவதாக Neuilly-sur-Seine பகுதியில் இருந்த பிளாட்பார்ம் ஒன்றில் காத்திருந்த நபரை மர்ம கும்பல் ஒன்று தாக்கி அவரிடமிருந்த கைக்கடிகாரத்தை திருடிச் சென்றுள்ளனர்.

அடுத்தபடியாக மூன்றாவதாக பரிஸ் 17-ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது. இது இரவு 10.45 மணிக்கு வீதியில் நடந்துசென்றுகொண்டிருந்த ஒருவரை தாக்கி அவரிடம் இருந்து €15,000 மதிப்புள்ள கைக்கடிகாரத்தை திருடியுள்ளனர்.

இந்த மூன்று சம்பவங்கள் தொடர்பான பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்