நிர்வாண நிலையில் புதைக்கப்பட்டிருந்த இளம்பெண்: கொலையை திசைதிருப்ப கொலையாளி செய்த தந்திரம்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரெஞ்சு திரைப்பட தயாரிப்பாளரான ஒரு இளம்பெண்ணின் உடல், நிர்வாண நிலையில், கயிற்றால் கட்டப்பட்டு, குப்பை போட பயன்படுத்தும் பைகளில் சுற்றப்பட்டு லண்டனிலுள்ள அவரது வீட்டுத்தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

Laureline Garcia-Bertaux (34) என்ற அந்த இளம்பெண்ணின் தோழியான Beth Penman என்ற பெண்ணுக்கு, தான் நன்றாக இருப்பதாகவும், ஷாப்பிங் செல்வதாகவும் தொடர்ந்து குறுஞ்செய்திகள் வந்த வண்ணம் இருந்திருக்கிறது.

ஆனால், Laureline ஷாப்பிங் செல்பவரல்ல, ஒன்லைனிலேயே பொருட்கள் வாங்கும் பழக்கம் உடையவர் என்பதால், அவரிடமிருந்து வந்த செய்திகள் Bethக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளன.

இப்படி தொடர்ந்து செய்திகள் வந்த நிலையில், மறுநாள் Laureline வேலைக்கு வராததால், Beth அவருக்கு குறுஞ்செய்தி அனுப்ப, அவரிடமிருந்து பதில் எதுவும் வரவில்லை.

பொலிசார் Laurelineஐ தேடும் நடவடிக்கையின்போது, அவர் வசித்த வீட்டின் பின்புறத்திலேயே அவரது உடல் புதைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விசாரணையில் அந்த வார இறுதியை எஸ்தோனியரான Kirill Belorusov என்பவருடன் Laureline செலவிட்டிருந்தது தெரியவந்துள்ளது.

Belorusov, Laurelineஇன் முன்னாள் காதலராவார். Laurelineஇன் உடல் கண்டுபிடிக்கப்படுவதற்குமுன் Belorusov அவரது உடலை புதைப்பதற்கு தேவையான கோடரி முதலான பொருட்களை சூப்பர் மார்க்கெட் ஒன்றில் வாங்குவது, அங்குள்ள CCTV கமெரா காட்சிகளில் பதிவாகியுள்ளது.

ஆனால் Laurelineஇன் உடல் கண்டுபிடிக்கப்படுவதற்குமுன் Belorusov எஸ்தோனியாவுக்கு தப்பிச் சென்றுவிட்டார்.

பின்னர் பிரித்தானிய அரசு அவரை லண்டனுக்கு அழைத்து வந்துள்ளது. விசாரணையின்போது, Laurelineஐ கொலை செய்ததையும், கொலை செய்வதற்கு முன் பொலிசாரை திசை திருப்புவதற்காக Laurelineஇன் மொபைலிலிருந்தே அவரது தோழிக்கு போலியான செய்திகளை அனுப்பியதையும் மறுத்துள்ளார் Belorusov.

உடற்கூறு பரிசோதனையில், Laurelineஇன் கழுத்தை நெறிக்க பயன்படுத்தப்பட்ட கயிற்றில் Belorusovஇன் DNA இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Belorusov, Laurelineஇடம் பெருந்தொகை ஒன்றை கடனாக பெற்றுள்ளார். ஆனால் அதை Laureline திருப்பிக் கேட்டபோது, Belorusov தலையை மொட்டை அடித்துக்கொண்டு, தனக்கு புற்றுநோய் வந்துள்ளதாக ஏமாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு வேளை பணத்தை கேட்கலாம் என்பதால், அதிலிருந்த தப்ப திட்டமிட்டுள்ள Belorusov, Laurelineக்கு உதவுவது போல் நடித்து, அவருக்கு ஒரு புது வீடு வாடகைக்கு பார்த்திருப்பதாகக் கூறி ஏமாற்றி, அவரை சந்தித்து அவரை கொலை செய்து புதைத்துள்ளார் Belorusov. விசாரணை தொடர்கிறது.

Facebook
Facebook
PA:Press Association

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்