பாரிஸில் ஏற்பட்ட பெரும் தீ விபத்து!

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்சில் பாரிசின் வடக்கு புறநகரில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, 100 தீயணைப்பு வீரர்கள் களத்தில் இறங்கினர்.

பாரிசின் வடக்கு புறநகரான Saint-Ouenயில் உள்ள கார் garage ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. நேற்றைய தினம் நண்பகலின்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் வெளியான கரும்புகை வானில் பரவியது.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் 100 பேர், சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 40 தீயணைப்பு வாகனங்களில் தண்ணீர் கொண்டு வரப்பட்டது.

கடுமையாக போராடிய அவர்கள், வேகமாக பரவிய தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். விபத்துக்குள்ளான garage சுமார் 800 சதுர மீற்றர் நிலப்பரப்பை கொண்டது.

LP/Olivier Arandel

இதில் இருந்து அதிகளவிலான கார்கள் அனைத்து தீக்கிரையானதால், வானில் பெரும் கரும்புகை எழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே போக்குவரத்து மிகுந்த சாலை மேலும் நெரிசல்களில் சிக்கியது.

இந்நிலையில், தீ மற்ற கட்டிடங்களுக்கு பரவாமல் தடுக்க முக்கியமான வழிமுறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என பாரிசின் தீயணைப்பு வீரர்களின் படைப்பிரிவு தளபதி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இந்த தீ விபத்தில் ஒரு தீயணைப்பு வீரர் மட்டும் காயமடைந்ததாகவும், மற்றவர்கள் தொடர்பில் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

LP/NR

IP3 PRESS/MAXPPP

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்