விமானம் தரையில் மோதுவதிலிருந்து தப்ப பாராசூட்டில் குதித்த விமானி: மின் கம்பத்தில் இறங்கியதால் அதிர்ச்சி!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பயிற்சியின்போது விபத்துக்குள்ளான போர் விமானம் ஒன்றிலிருந்து தப்புதற்காக பாராசூட்டில் குதித்த விமானிகளில் ஒருவர் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கும் மின் கம்பத்தில் இறங்கியதால் பரபரப்பு ஏற்படது.

பெல்ஜியம் விமானப்படையை சேர்ந்த போர் விமானம் ஒன்று, வட மேற்கு பிரான்சில் தரையில் மோதி விபத்துக்குள்ளானது.

Brittany பகுதியில் அந்த விமானம் விபத்துக்குள்ளானபோது, தரையில் மோதுவதற்குமுன் விமானத்திலிருந்த விமானிகள் இருவரும் பாராசூட்டில் குதித்தனர்.

அவர்களில் ஒருவரது பாராசூட் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கும் மின் கம்பத்தில் சென்று இறங்கியது.

அந்த மின் கம்பியில் 250,000 வோல்ட்கள் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்திருக்கிறது.

ஆனால் அதிர்ஷ்டவசமாக அவரது உடல் மின் கம்பியில் படாததால் அவர் உயிர் தப்பினார்.

பெல்ஜியத்திலிருந்து பிரான்சின் Lorientஇலுள்ள விமானப்படை விமான தளம் ஒன்றை நோக்கி அந்த போர் விமானம் வந்துகொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மின்சாரம் உடனடியாக நிறுத்தப்பட்டாலும், மின் கம்பத்தில் தொங்கிக் கொண்டிருந்த விமானியை மீட்க பிரெஞ்சு மருத்துவ உதவிக்குழுவினருக்கு சுமார் இரண்டு மணி நேரம் தேவைப்பட்டது.

எனவே அந்த நேரத்தில், அதிகாரிகள் அவருடன் தொடர்ந்து தொலைபேசியில் பேசிக்கொண்டே இருப்பதன் மூலம் அவரை ரிலாக்சாக வைத்துக்கொண்டனர்.

இரண்டு மணி நேரத்துக்குப்பின் அவர் மீட்கப்பட, அவரும் மற்றொரு விமானியும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பரிசோதனைக்குப்பின் வீடு திரும்பினர்.

அதே நேரத்தில் விமானம் கீழே விழும்போது, வீடு ஒன்றின் மீதும், அதன் அருகிலுள்ள பொருட்கள் வைக்கும் shed-ன் மீதும் உரசியதால் வீடு சேதமடைந்ததோடு shed முற்றிலும் எரிந்து நாசமானது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்