பாரிசை முடக்கும் மஞ்சள் மேலாடை போராளிகள்? அதிகரிக்கும் பாதுகாப்பு

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்சில் மஞ்சள் மேலாடை போராளிகள் பெரிதளவில் போராட்டத்தில் ஈடுபட உள்ளதால், பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

மஞ்சள் மேலாடை 45வது வாரமாக இன்று பிரான்சின் பல நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக தலைநகர் பாரிஸ் பெரியுளவில் மஞ்சள் மேலாடை போராளிகள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக, பாரிசில் 7,500 பொலிசார் மற்றும் ஜோந்தாமினர் குவிக்கப்பட்டுள்ளனர். La France en colere என்ற அமைப்பின் நிர்வாக இயக்குனர் Eric Drouet, சோம்ப்ஸ்-எலிசேயில் பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று தெரிவித்தார்.

நேற்று மாலை வரை இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட 11,000 பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். Place de la Madeleine பகுதியில் ஒரு அமைப்பும், 16ஆம் வட்டாரத்தின் Edmond-Rostand பகுதியில் மற்றொரு குழுவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளது.

இங்கிருந்து பேரணியை ஆரம்பிக்கும் இந்த குழு, Luxembourg Gardens வரை செல்ல உள்ளது. அதேபோல் 7ஆம் வட்டாரத்தின் parade Duroc பகுதியில் இருந்து, 14ஆம் வட்டாரத்தின் Denfert-Rochereau வரை மற்றொரு குழு பேரணியில் ஈடுபட உள்ளது.

இது போன்ற ஆர்ப்பாட்டங்களால், கிட்டத்தட்ட பாரிஸ் நகர் முழுவதும் பல வீதிகள் முடக்கப்பட்டு, போக்குவரத்து தடைப்பட உள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers