இளவரசி டயானா மரணத்தில் உள்ள மர்மம்.. மறைக்க பிரான்ஸ் செய்த சூழ்ச்சி: 20 ஆண்டுகளுக்கு பின் கூறிய ஓட்டுநர்

Report Print Basu in பிரான்ஸ்

இளவரிசி டயானாவின் கார் சுரங்கப்பாதை தூணில் மோதியதற்கு முன்னதாக தனது Fiat Uno காருடன் மோதியதாக அக்காரை ஓட்டி வந்த ஓட்டுநர் Le Van Thanh கூறியுள்ளார்.

ஆகத்து 31ம் திகதி 1997 அன்று Pont de l’Alma சுரங்கப்பாதையில் ஏற்பட்ட விபத்தில் டயானா, அவரது காதலர் Dodi Fayed மற்றும் அவரது ஓட்டுநர் Henri Paul ஆகியோர் கொல்லப்பட்டனர்.

20 ஆண்டுகளுக்கு பின் முதன்முறையாக பேசிய வியட்நாமில் பிறந்த Van Thanh, விபத்து குறித்து அறிக்கை அளிக்க இங்கிலாந்துக்கு வருமாறு பிரித்தானியா காவல்துறை கேட்டுக் கொண்டதாகக் கூறினார், ஆனால் சில பிரான்ஸ் அதிகாரிகள் அவரிடம், அங்கு செல்ல வேண்டாம் என்று எச்சரித்ததாகவும் குறிப்பிட்டார்.

Van Thanh கூற்றால் டயானாவின் மரணம் தொடர்பான விசாரணை வழக்காக மீண்டும் விசாரணை செய்ய வேண்டிய கட்டயாம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விபத்து குறித்து ஒரு புத்தகம் எழுதும் குழுவிடம் பாரிஸ் ஓட்டுனர் Van Thanh கூறுகையில், அவரை அணுகினால் பிரித்தானியா பொலிஸ் அதிகாரிகளுடன் பேசுவேன் என்று கூறியுள்ளார்.

பிரித்தானியா புலனாய்வாளர்கள் அவரை நேர்காணல் செய்ய விரும்புவதாகக் கூறப்பட்ட பின்னர், அவர் கூறினார், அவர்கள் வருவார்கள் என்று எனக்குத் தெரியும். அவர்கள் திரும்பி வருவார்கள் என்று பல முறை சொன்னார்கள்.

ஏனென்றால் இறுதியில், நான் இங்கிலாந்து செல்ல வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். ஆனால், பிரான்சில் உள்ள அதே சட்டம் பிரித்தானியாவில் இல்லை, அங்கு செல்ல வேண்டாம்… அங்குசெல்ல வேண்டாம் என பிரான்ஸ் காவல்துறை அவரை எச்சரித்தாக கூறினார்.

(Image: dailystar.co.uk)

கடந்த இருபது ஆண்டுகளில்,இதுவரை பிரித்தானியா பொலிஸாருக்கு அறிக்கையை வழங்க இங்கிலாந்துக்கு செல்லவில்லை என்று கூறியுள்ளார் Le Van Thanh, அதற்கு முக்கிய காரணம் பிரான்ஸ் என கூறினார்.

டயானாவின் மரணத்தில் தான் ஈடுபட்டதாகக் கூறப்படுவதால், தான் குற்றமற்றவர் என்று உணர்ந்ததாக Van Thanh கூறினார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்