ஜேர்மனியில் 500 மீற்றர் உயர கட்டிடத்தில் உபகரணங்கள் எதுவும் இன்றி ஏறிய பிரான்ஸ் நாட்டவர்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

உபகரணங்கள் எதுவும் இன்றி கட்டிடங்களில் ஏறுவதால் பிரெஞ்சு ஸ்பைடர்மேன் என்று அழைக்கப்படும் Alain Robert என்பவர், இன்று ஜேர்மனியில் உள்ள 500 மீற்றர் உயர கட்டிடத்தில் ஏறினார்.

பிராங்பர்ட்டில் உள்ள ’Skyper tower’ என்ற கட்டிடத்தில் அவர் ஏறினார்.

57 வயதாகும் Robert, அந்த 42 மாடி கட்டிடத்தில் வெறும் அரை மணி நேரத்தில் கயிறு உள்ளிட்ட எந்த உபகரணங்களுமின்றி ஏறினார்.

இதைக்கண்ட மக்கள் ஆங்காங்கு நின்று அவரை வேடிக்கை பார்க்கவும் படம்பிடிக்கவும் தொடங்கினார்கள்.

அவர் கீழே இறங்கவும், தயாராக இருந்த பொலிசார் அனுமதியின்றி அந்த கட்டிடத்தில் ஏறியதற்காக Robertஐக் கைது செய்தனர்.

1994 முதல் Robert இதேபோல் பல கட்டிடங்களில் உபகரணங்கள் எதுவும் இன்றி ஏறி வருகிறார். உலகிலேயே உயரமான கட்டிடமான துபாயின் Burj Khalifa, பாரீஸின் ஈபிள் கோபுரம் உட்பட பல கட்டிடங்களில் ஏறியுள்ளார் அவர்.

ஆகத்து மாதம், நாடு முழுவதும் பேரணிகள் நடந்து வரும் ஹொங்கொங்கிலுள்ள வானுயர கட்டிடம் ஒன்றில் ஏறி சமாதான பேனர் ஒன்றை தொங்கவிட்டார் அவர். இன்று அவர் Skyper towerஇல் ஏறியதற்கு காரணம் எதுவும் கூறவில்லை.

Credit: AFP or licensor

(AFP)

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்