பிரான்சில் வெளிநாட்டு குடும்பத்தினரிடம் நடந்த கொள்ளை சம்பவம்.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் சீன உணவக உரிமையளர் வீடு ஒன்றில் கொள்ளையில் ஈடுபட்ட நான்கு பேருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் Vitry-sur-Seine பகுதியில் இருக்கும் சீன உணவக உரிமையாளரின் வீட்டில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த மர்ம நபர் நான்கு, அங்கிருந்தவர்களை தாக்கி, வன்முறை செய்து, வீட்டில் இருந்த பணம், மற்றும் விலையுயர்ந்த பொருட்கள் என €15,000 பெறுமதியுள்ள பொருட்கள் மொத்தமாக கொள்ளையிட்டுச் சென்றனர்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், குற்றவாளிகள் நான்கு பேரும் கைது செய்யப்பட்டு,

Creteil நகரில் உள்ள Assize நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று விசாரணைக்கு வந்தது, அப்போது குறித்த நான்கு பேருக்கும் 12 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்