பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி Jacques Chiracயின் இறுதி அஞ்சலி!

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்சில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி Jacques Chiracயின் இறுதி அஞ்சலி நிகழ்வு இன்று இடம்பெற உள்ளது.

கடந்த வாரம் காலமான பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி Jacques Chiracயின் உடல் Invalidesயில் பொதுமக்கள் பார்வைக்காகவும், அஞ்சலிக்காகவும் வைக்கப்பட்டிருந்தது.

நேற்றைய நாளில், ஒரு கிலோ மீற்றருக்கும் அதிகமான மக்கள் திரண்டு வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இரவு முழுவதும் பொதுமக்களின் பார்வைகாக திறக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை இறுதி அஞ்சலி நிகழ்வுக்காக அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது.

Sipa/Shutterstock

இதற்கிடையில் இரவு 9 மணியளவில் Hotel des Invalidesயில் இருந்து வெளியேறிய Jacquesயின் மகள் கூறுகையில்,

‘இது மிகவும் உணர்ச்சிகரமான ஒரு தருணம். திரண்டு வந்து அஞ்சலி செலுத்திய பிரெஞ்சு மக்களுக்கு நன்றிகள். குறிப்பிட்ட இந்த தருணம், மிகவும் வலிமையானது’ என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, எலிசே மாளிகையில் முன்னாள் ஜனாதிபதியின் இறுதி அஞ்சலி நிகழ்வு இடம்பெறுகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்