முன்னாள் ஜனாதிபதி Jacques Chiracயின் உடல் முன் நின்று மவுன அஞ்சலி செலுத்திய மேக்ரான்! வீடியோ

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்சின் எலிசே மாளிகையில், முன்னாள் ஜனாதிபதி Jacques Chiracயின் இறுதி அஞ்சலியில் கலந்துகொண்ட மேக்ரான் மவுன அஞ்சலி செலுத்தினார்.

பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி Jacques Chirac காலமானதைத் தொடர்ந்து, அவரது உடல் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது.

ஆயிரக்கணக்கான மக்கள் Invalidesயில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து, இறுதி அஞ்சலிக்காக Jacquesயின் உடல் எலிசே மாளிகைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு, தேசியக்கொடி போர்த்தப்பட்ட சவப்பெட்டியில் அவரது உடல் வைக்கப்பட்டு, the court of honourயின் நடுவில் வைக்கப்பட்டது.

ராணுவ மரியாதை செலுத்தப்பட்டு, துக்கத்தை அனுசரிக்கும் வகையில் பிரெஞ்சு தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது.

அப்போது, சவப்பெட்டியின் முன்பு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவெல் மேக்ரான் நின்றவாறு மவுன அஞ்சலி செலுத்தினார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்