பிரான்சிலிருந்து பிரித்தானியா செல்ல 7,000 பவுண்டுகள்தான்: புலம்பெயர்வோரை கடத்தும் நபர் அதிரடி!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

தன்னிடம் பேசுவது யார் என்று தெரியாமலே புலம்பெயர்வோரை கடத்தும் நபர் ஒருவர், பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்கு சட்டவிரோதமாக செல்வது எப்படி என்பதை விளக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

பிரித்தானியா செல்ல விரும்பும் ஒருவரை புலம்பெயர்வோரை கடத்தும் நபர் ஒருவர், எப்படி பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்கு சட்டவிரோதமாக அனுப்புவார் என்பதை கண்டுபிடிப்பதற்காக, போலியாக ஒரு நபருடன் சென்ற பிரபல வானொலியைச் சேர்ந்தவர்களிடம், தன்னிடம் பேசுவது யார் என்று தெரியாமலே உளறிக்கொட்டியிருக்கிறார் ஒருவர்.

பிரான்சிலிருக்கும் பரூக் என்ற அந்த நபரிடம் ஒருவரை அழைத்துச் சென்று, அவர் பிரித்தானியாவுக்கு செல்ல விரும்புவதாகக் கூறி, அவர் என்ன செய்யவேண்டும் என்று கேட்கிறார்கள் வானொலி நிலையத்தினர்.

வட பிரான்சிலிருக்கும் அகதிகள் முகாம் ஒன்றிலிருக்கும் பரூக்கிடம் பிரித்தானியாவுக்கு செல்ல எவ்வளவு செலவாகும் என்று கேட்க, வெறும் 7,000 பவுண்டுகள்தான் என்கிறார் அவர்.

கார் ஒன்று வரும், உங்களை காரில் ஏற்றி அனுப்பிவிடுவேன், அந்த காரிலிருக்கும் குர்திஷ் மக்கள், உங்களை பிரித்தானியாவுக்கு செல்லும் படகு ஒன்றில் ஏற்றிவிடுவார்கள்.

இரண்டு மணி நேரத்தில் நீங்கள் பிரித்தானியாவில் இருப்பீர்கள் என்கிறார் பரூக். ஆங்கிலக் கால்வாயில் பிரித்தானிய எல்லைக்குள் நீங்கள் நுழைந்துவிட்டால் போதும், பிரித்தானிய பொலிசார் உங்களை கைது செய்து பிரித்தானியாவிற்குள் கொண்டு சென்றுவிடுவார்கள் என்கிறார் அவர்.

அதே நேரம் பிரெஞ்சு பொலிசார் இப்படி கடத்தப்படுபவர்களுக்கு உதவுவார்கள் என்று வேறு கூறியுள்ளார் அவர். பிரெஞ்சு பொலிசார் உங்களைப் பார்த்தால், உங்களை கைது செய்யவோ, சிறையிலடைக்கவோ மாட்டார்கள் என்கிறார் அவர்.

பிரெக்சிட்டைப் பயன்படுத்தி பரூக் போன்ற கடத்தல்காரர்கள் மக்களை எப்படி ஏமாற்றுகிறார்கள் என்பதைக் குறித்து பிரபல பத்திரிகை ஒன்று ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்