பிரான்சில் குடியேற முயற்சி... பறக்கும் விமானத்தில் உடல் உறைந்து மரணமடைந்த நபர்: வெளிவரும் பகீர் தகவல்

Report Print Arbin Arbin in பிரான்ஸ்

மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள விமான நிலையம் ஒன்றில் இருந்து மொரோக்கோ சென்ற விமானத்தில் திருட்டுத்தனமாக பயணித்த நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கினியாவின் தலைநகரான கோனக்ரி விமான நிலையத்தில் இருந்து செப்டம்பர் 30 ஆம் திகதி அந்த விமானம் புறப்பட்டு சென்றுள்ளது.

மொரோக்கோவில் தரையிறங்கும் இந்த விமானமானது பின்னர் பிரான்ஸ் நோக்கி பயணமாகும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் குறித்த விமானத்தின் சக்கரம் அமைந்துள்ள பகுதியில் இருந்து கடும் பணியில் உறைந்த நிலையில் ஆணின் சடலம் ஒன்றை விமான நிலைய ஊழியர்கள் மீட்டுள்ளனர்.

குறித்த நபர் சட்டவிரோதமாக பிரான்சில் குடியேற முயற்சி செய்திருக்கலாம் என கூறியுள்ள அதிகாரிகள்,

கோனக்ரியில் இருந்து விமானம் புறப்பட்ட நிலையில் வெப்பநிலை -63C என சரியும் என்பதால் அவரால் கண்டிப்பாக உயிர் பிழைக்க வாய்ப்பு இருந்திருக்காது என்றனர்.

இந்த விவகாரம் தொடர்பில் வெளியான காணொளி காட்சி ஒன்றில், அந்த நபரின் சடலம் விமானத்தின் முன் சக்கரத்தில் தொங்கியபடி இருந்துள்ளது.

திருட்டுத்தனமாக விமானத்தில் பயணம் செய்பவர்கள் மரணமடைவது இது முதன்முறை அல்ல என கூறும் அதிகாரிகள்,

கடந்த ஜூன் மாதம் ஹீத்ரோ விமனா நிலையம் நோக்கி புறப்பட்டு சென்ற விமானத்தில் இருந்து திருட்டுத்தனமாக பயணித்த நபர் ஒருவரின் சடலம் தெற்கு லண்டனில் உள்ள பூங்கா ஒன்றில் விழுந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்