பிரான்ஸ் தலைநகர் பாரிசில் எரிவாயு கசிவு... உடண்டியாக வெளியேற்றப்பட்ட மக்கள்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஏற்பட்ட எரிவாயு கசிவால் 50 பேர்வரை வெளியேற்றப்பட்டனர்.

கடந்த திங்கட் கிழமை, பிரான்ஸ் தலைநகர் பாரிசின் 9 ஆம் வட்டாரத்தின் rue Ambroise Thomas வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் இது குறித்து உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் குறித்த கட்டிட்டத்தில் வசித்த 50 பேர் வரையான மக்களை வெளியேற்றினர்.

பின்னர் GRDF அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு படையினர் சிலமணிநேர போராட்டத்தின் பின்னர் நிலமை வழமைக்குத் திரும்பியுள்ளது.

இச்சம்பவத்தில் எவரும் பாதிப்புக்குள்ளாகவில்லை. நிலமை வழமைக்குத் திரும்பியதன் பின்னர் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்