தபால் நிலையம் சென்ற 77 வயது பெண்மணியை சூழ்ந்துகொண்ட பொலிசார்: காரணம் தெரியவந்ததால் அதிர்ச்சி!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்ஸ் தபால் நிலையம் ஒன்றில் பணம் எடுக்கச்சென்ற ஒரு 77 வயது பெண்மணியை திடீரென பொலிசார் சூழ்ந்துகொள்ள, அதிர்ந்துபோனார் அவர்.

அத்துடன் எதற்காக பொலிசார் தன்னை சூழ்ந்து கொண்டார்கள் என்பது தெரியவர அதிர்ச்சியடைந்துள்ளார்.

பிரான்சின் Sorgues என்ற பகுதியைச் சேர்ந்த Raymonde என்ற 77 வயது பெண்மணி, பணம் எடுப்பதற்காக தபால் நிலையம் சென்றுள்ளார்.

தனது அடையாள அட்டையின் லேமினேட் செய்யப்பட்ட வண்ண நகல் ஒன்றை அவர் தபால் நிலைய ஊழியரிடம் கொடுக்க, அவர் அந்த அட்டையை சந்தேகத்துடன் பார்த்திருக்கிறார்.

பின்னர் அங்கிருந்து சென்ற அந்த ஊழியரை அரை மணி நேரமாக காணவில்லை. அத்துடன், திடீரென தபால் நிலையத்திற்குள் நுழைந்த பிரெஞ்சு பொலிசார், Raymondeஐ சூழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஒன்றும் புரியாமல் Raymonde விழிக்க, அவர் கொடுத்த அடையாள அட்டை போலியானது என்று கூறி, அவர் ஒரு தீவிரவாதியாக இருக்கலாம் என்று கருதி தபால் நிலைய ஊழியர் பொலிசாரை அழைத்தது, பின்னர் அவருக்கு தெரியவந்தது.

பொலிசார் தங்கள் கடமையைச் செய்ய, விசாரணையில் Raymondeஇன் அடையாள அட்டையில் எந்த தவறும் இல்லை என்பதும், அவர் ஒரு தீவிரவாதி இல்லை என்பதும் தெரியவந்தது.

தன் மீதான தவறான குற்றச்சாட்டுகளுக்காக தபால் நிலையம் அதிகாரப்பூர்வமாக மன்னிப்புக்கோர வேண்டும் என்று கோரினார், 30 ஆண்டுகளாக பிரான்ஸ் நீதி பணியாற்றிய Raymonde.

இது நடந்தது யூலை மாதத்தில், இன்றுவரை தபால் நிலையம் அவரிடம் மன்னிப்புக்கோராததோடு, தாங்கள் சரியாகத்தான் செயல்பட்டதாகவும், Raymondeதான் முரட்டுத்தனமாக நடந்துகொண்டதாகவும் கூறி, எங்களைப்பொருத்தவரை இது முடிந்துபோன விடயம் என முகத்திலடித்தாற்போல் கூறிவிட்டது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments