பாரிஸ் காவல்துறை தலைமையகத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்: குவிக்கப்பட்ட பொலிசால் பரபரப்பு

Report Print Arbin Arbin in பிரான்ஸ்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அமைந்துள்ள காவல்துறை தலைமைகத்தில் மர்ம நபர் புகுந்து கத்தியால் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் பெண் காவலர் உட்பட நால்வர் கொல்லப்பட்டுள்ளதாகவும் மேலும் பலர் காயங்களுடன் தப்பியதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

உள்ளூர் நேரப்படி பகல் ஒரு மணியளவில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. தாக்குதலில் ஈடுபட்டு தப்ப முயன்ற நபரை பொலிசார் சுட்டுக் கொன்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

தாக்குதலுக்கு முற்பட்டவர் பொதுமக்கள் போன்று காவல்துறை தலைமையகத்தில் நுழைந்ததாக கூறப்படுகிறது. மட்டுமின்றி தாக்குதலுக்கு அவர் பீங்கான் கத்தியை பயன்படுத்தியதாகவும் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்து உள்விவகார அமைச்சர் Christophe Castaner சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளார் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தற்போது பாரிஸின் முக்கிய பகுதிகளில் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளதாகவும், காவல்துறை தலைமையகம் பொலிஸ் பாதுகாப்பு வளையத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தாக்குதல் நடந்த பகுதியானது வரலாற்றுச் சிறப்பு மிக்க Notre Dame அருகே என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்