பாரீஸ் காவல்துறை தலைமையகத்திற்குள் நடந்த தாக்குதல்: தாக்கியவர் யார் என தெரியவந்ததால் அதிர்ச்சி!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பாரீஸ் காவல்துறை தலைமையகத்தில் ஒருவர் பொலிசார் மற்றும் நிர்வாக ஊழியர்களை கத்தியால் குத்திய சம்பவத்தில், அதே அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவரே தாக்குதலில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது..

நேற்று உள்ளூர் நேரப்படி மதியம் ஒரு மணியளவில், பாரீஸ் காவல்துறை தலைமையகத்திற்குள் நுழைந்த ஒருவர், அங்கு பணி செய்துகொண்டிருந்த சிலரை கத்தியால் குத்தியதாக தகவல் வெளியானதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அந்த நபர் அலுவலகங்களுக்குள் நுழைந்து மூன்று பேரை கத்தியால் குத்தியதோடு, படிக்கட்டில் வந்துகொண்டிருந்த இரண்டு பெண்களையும் குத்தியிருக்கிறார்.

உடனடியாக மற்றொரு பொலிசார் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றிருக்கிறார். அந்த நபரால் சுடப்பட்டவர்களில், மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் உயிரிழந்துவிட்டனர்.

மோசமாக காயமடைந்துள்ள மற்றொரு பெண் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

தற்போது, கத்தியால் குத்திய அந்த நபர், அதே அலுவலகத்தில் பணியாற்றிய ஒரு தகவல் தொழில்நுட்ப நிபுணர் என்று தெரியவந்துள்ளது.

45 வயதுள்ள அந்த நபர், ஒரு தகவல் தொழில்நுட்ப நிபுணர் என்றும், அவர் பாரீஸ் பொலிஸ் படையில் 16 ஆண்டுகள் பணியாற்றியவர் என்றும் பிரான்ஸ் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அவர் பொலிஸ் துறையின் உளவுப் பிரிவில் பணியாற்றியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர் எதற்காக இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டார் என்பது தெரியவில்லை. அவருக்கும் அவரது கண்காணிப்பாளருக்கும் பிரச்னை இருந்ததாக மட்டும் தெரிகிறது.

இதற்கிடையில் அவரது வீட்டை சோதனையிட்ட பொலிசார், அவரது மனைவியை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்