ஐ.எஸ்-யுடன் தொடர்பு.. பாரிஸ் தாக்குதல்தாரி கணினியில் சிக்கிய திடுக்கிடும் தகவல்கள்

Report Print Basu in பிரான்ஸ்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கத்தியால் தாக்குதல் நடத்தி நான்கு பேரை கொன்ற நபர், தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது.

முஸ்லிமாக மாறிய 45 வயதான காது கேளாத Michael Harpon, Notre Dame தேவாலயத்திற்கு அருகே கத்தியால் சரமாரியாக தாக்குதல் நடத்தினார். இதில் மூத்த பொலிஸ் அதிகாரி உட்பட நான்கு பேரை கொல்லப்பட்டனர்.

இதனையடுத்து, நேற்று Michael Harpon-ஐ சுட்டுக்கொன்ற பொலிஸ் அதிகாரிகள், அவருக்கு ஐ.எஸ்-ன் அல் கொய்தாவுடன் தொடர்பு இருந்ததாக தெரிவித்துள்ளனர்.

Michael Harpon-ன் மனைவி Iham-ஐ கைது செய்து வீட்டில் சோதனை நடத்தி, அங்கிருந்த கைப்பற்றப்பட்ட கணிணி மற்றும் போன்களை ஆய்வு செய்துள்ளனர். அதில், அவர் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தது கண்டறியப்பட்டதாக பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதம் தொடர்பாக ஒரு பொது ஊழியரை படுகொலை செய்தது, கொலை செய்ய முயன்றது மற்றும் பயங்கரவாத சதிதிட்டம் போன்ற விடயங்கள் தொடர்பாக தீவிரவாத தடுப்பு வழக்கறிஞர்கள் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

Martinique-ல் இருரந்து வந்த Harpon தாக்குதலின் தன்மை, ஐ.எஸ் மற்றும் அல் கொய்தா தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலுடன் ஒத்திருந்ததாக பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்