ஒரு மாதத்தில் இரண்டாவது பிரான்ஸ் விமான நிறுவனம் திவால்.. நூற்றுக்கணக்கானோர் வேலை இழப்பு

Report Print Basu in பிரான்ஸ்

பிரான்சின் பிரபல விமான நிறுவனமான XL ஏர்வேஸ் திவாலாகிவிட்டதாக அறிவித்த பின்னர், நிறுவனத்தை மூடுமாறு பிரான்ஸ் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

XL நிறுவனத்திற்கு கடைசி வாய்ப்பளிக்க நிராகரித்த Bobigny-யில் உள்ள வணிக நீதிமன்றம், அதை நீதித்துறை செயல்முறை மூலம் மூடுவதற்கு உத்தரவிட்டது. இதனால், 570 ஊழியர்கள் வேலைஇழக்க நேரிடும்.

XL ஏர்வேஸ் செப்டம்பர் 30ம் திகதி அனைத்து விமானங்களையும் நிறுத்தியது மற்றும் ஏலத்தை ஈர்க்க போராடியது. பிரான்ஸ் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் ஏர் பிரான்ஸ் நிறுவனம், XL நிறுவனத்தை ஏலத்தில் எடுக்க ஆர்வமாக இல்லை என்று கூறியது.

XL நிறுவனத்திடம் நான்கு ஏர்பஸ் ஜெட் விமானங்கள் உள்ளது, முக்கியமாக வட அமெரிக்காவின் நகரங்கள், சீனாவின் சில இடங்கள் என நீண்ட தூர பயணத்திற்கு குறைந்த கட்டண சேவை அளித்து வந்தது, கடந்த ஆண்டு சுமார் 7,30,000 பயணிகளுக்கு சேவை அளித்திருந்தது.

அமெரிக்க சந்தையில் அதன் குறைந்த விலை போட்டியாளரான Norwegian நிறுவனத்தால் நிதி சிக்கல்களுக்கு ஆளானதாக XL தலைமை நிர்வாகி Laurent Magnin குற்றம் சாட்டினார்.

எந்தவொரு கையகப்படுத்தும் சலுகைகளையும் பெறத் தவறியதால், பிரான்சின் இரண்டாவது பெரிய விமான நிறுவனமான Aigle Azur செப்டம்பர் 27ம் திகதி நீதிமன்றத்தால் மூடப்பட்டதை அடுத்து XL விமான நிறுவனத்திற்கு இந்த அவலநிலை ஏற்பட்டுள்ளது.

குறைந்த கட்டணப் போட்டிகளால் சிறிய நிறுவனங்கள் நெருக்கடிக்கு தள்ளப்படுவதால் ஐரோப்பாவில் விமானத் துறை பலவீனமாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்