பாரிசில் நடந்தது தீவிரவாத தாக்குதல் தான்.. உறுதிபடுத்தப்பட்ட தகவல்!

Report Print Kabilan in பிரான்ஸ்

கடந்த வியாழக்கிழமை பாரிஸ் தலைமையகத்தில் இடம்பெற்றது முற்றுமுழுதான தீவிரவாத தாக்குதல் என்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள காவல்துறை தலைமையகத்திற்குள், கடந்த வியாழக்கிழமை கத்திக் குத்து தாக்குதல் நடந்தது.

இதில் மூன்று ஆண்கள், ஒரு பெண் உயிரிழந்தனர். தாக்குதலை நடத்தியது 45 வயதான நபர் என்பதும், Mickael Harpon என்பது அவரது முழுப்பெயர் என்பதும் தெரிய வந்தது.

மேலும், அவர் ஒரு தகவல் தொழில்நுட்ப நிபுணர் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. இந்நிலையில், இது முற்றுமுழுதான தீவிரவாத தாக்குதல் என உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

கண்காணிப்பு கமெராக்களை ஆராய்ந்தபோது, RER நிலையமான Saint-Michel நிலையத்தில் சம்பவம் நடந்த அன்று காலை 8.56 மணிக்கு Mickael பதிவாகியுள்ளார்.

கணினி பாதுகாப்புகளை முடித்துக்கொண்டு, 8.58 மணிக்கு உள் நுழைந்த அவர், 12.18 மணிக்கு செயலகத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

அங்கிருந்து அருகில் உள்ள rue Saint-Jacques வீதிக்கு நடந்து சென்றுள்ளார். 12.24 மணிக்கு அந்த வீதியில் உள்ள கடை ஒன்றில் கத்தி ஒன்றை வாங்கியுள்ளார்.

மீண்டும் 12.42 மணிக்கு பணிக்கு திரும்பிய Mickael, 12.51 மணிக்கு தனது அலுவலக பகுதிக்கு வந்து, 12.53 மணிக்கு முதல் தாக்குதலை ஆரம்பித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, தொடர்ச்சியாக அவர் அதிகாரிகளை குத்தி கிழித்து தாக்கி வேட்டையாடியுள்ளார். மொத்தமாக 7 நிமிடங்கள் இந்த தாக்குதல்கள் நீடித்ததாக உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்