பாரிசை முற்றுகையிட்ட பெண்கள்! 74 ஆயிரம் பேர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம்

Report Print Kabilan in பிரான்ஸ்

பாரிஸ் நகரை நேற்றைய தினம் பல்லாயிரக்கணக்கான பெண்கள் முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ‘Procreation medicalement assistee’ எனும் திட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து பெண்கள் மற்றும் ஆண்கள் பலர் இதில் ஈடுபட்டனர். இந்த எண்ணிக்கை எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்ததாக, ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்த அமைப்பினர் தெரிவித்தனர்.

தனியார் நிறுவனம் ஒன்று மேற்கொண்ட கணக்கெடுப்பின்படி, இந்த ஆர்ப்பாட்டத்தில் 74,500 பேர் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஈடுபட்டவர்கள், தங்களது கைகளில் பச்சை மற்றும் சிவப்பு நிற கொடிகளை பிடித்துக்கொண்டு ‘சுதந்திர சமத்துவம் தந்தைவழி’ எனும் தொனிப்பொருளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Luxembourg தோட்டத்தில் இருந்து ஆரம்பித்த இந்த ஆர்ப்பாட்ட பேரணி Montparnasse கோபுரத்துகு அருகே சென்றது.

கடந்த ஆண்டு இதுபோல் ஒரு ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி பிரம்மாண்டமான முறையில் நடந்தது. எனினும் நேற்றைய ஆர்ப்பாட்டம் அமைதியாக இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

AFP

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்