உலகப் புகழ்பெற்ற மோனாலிசா ஓவியம்.. 2 மாதங்களுக்கு பின் மீண்டும் திறப்பு!

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்சில் திருத்தவேலைகளுக்கு பின்னர் மோனாலிசா ஓவியம் மீண்டும் பொதுமக்களின் பார்வைக்கு திறக்கப்பட்டுள்ளது.

16ஆம் நூற்றாண்டில் ஓவியர் லியனார்டோ டாவின்சி வரைந்த மோனாலிசா ஓவியம் உலகப்புகழ் பெற்றது. பாரிசில் உள்ள இந்த ஓவியம், ஆண்டு முழுவதும் பல மில்லியன் பயணிகளை இழுக்கின்றது.

ஆனால், இந்த ஓவியம் அமைக்கப்பட்டிருந்த வழமையான அறை கடந்த 15 ஆண்டுகளாக திருத்தவேலை கண்டிருக்கவில்லை.

இதன் காரணமாக மிக அதிகமான பார்வையாளர்கள் கூடும் நேரத்தில், அந்த அறை அத்தனை சிறந்த அனுபவத்தை தரவில்லை என பல விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டிருந்தன.

REUTERS/Charles Platiau/File Photo

அதனைத் தொடர்ந்து, கடந்த மாதங்களுக்கு முன்னர் திருத்தப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டதால், மோனாலிசா ஓவியம் இடமாற்றம் செய்யப்பட்டது.

இந்நிலையில், திருத்தவேலை காரணமாக இடமாற்றம் செய்யப்பட்ட பின்னர், மீண்டும் தனது இடத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. லூவர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த ஓவியத்தை, பொது மக்கள் வழமையான இடத்தில் பார்வையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்