பிரான்சில் தொழில்துறை தளத்தில் பயங்கர தீ... 80 தொழில்கள்... 350 தொழிலாளர்கள் கடும் பாதிப்பு: திகில் வீடியோ

Report Print Basu in பிரான்ஸ்

பிரான்சில் தொழில்துறை தளத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லியோன்ஸுக்கு அருகிலுள்ள Villeurbanne-ல் தொழில்துறை தளத்தில் இந்த தீ விபத்து நடந்துள்ளது.

தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த 100 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 30 தீயணைப்பு வாகனம் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

தீப்பிடித்து ஏரியும் கட்டடத்தின் வீடியோக்களை அவசர உதவி குழுவினர் பகிர்ந்துள்ளனர். தீயினால் ஏற்கனவே பல சேதங்கள் ஏற்பட்டுவிட்டது தெரிகிறது.

முதற்கட்டமாக மக்கள் இப்பகுதியை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன. ஆனால் தளத்தில் உள்ள பொருட்கள் குறித்து எந்த கவலையும் அடைய தேவையில்லை என்று கூறியுள்ளனர்.

முன்னர் போக்குவரத்து நிறுவனமான ஆல்ஸ்டோமுக்கு சொந்தமான இந்த தளத்தில் தற்போது சிறிய மற்றும் நடுத்தர தொழில்நுட்பம் மற்றும் அதன் தொடர்புடைய தொழில்களின் கலவையாக இயங்கி வருகிறது.

இதில் சுமார் 80 தொழில்கள் மற்றும் 350 தொழிலாளர்கள் தீ விபத்தால் பாதிக்கப்படலாம் என்று நகர அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்