பிரான்சில் செல்லப்பிராணிகள் வைத்திருப்பவர்களை குறிவைத்து ஒரு மோசடி: ஒரு எச்சரிக்கை செய்தி!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சில் செல்லப்பிராணிகள் வைத்திருப்பவர்களைக் குறித்து ஒரு மோசடி நடைபெற்று வருகிறது.

அதாவது, யாருடைய செல்லப்பிராணியாவது காணாமல் போனால், அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வரும்.

உங்கள் செல்லப்பிராணி எங்களிடம்தான் உள்ளது, நாங்கள்தான் அதை கண்டுபிடித்தோம், இதுவரை அதை கவனித்துக்கொண்டதற்காக நாங்கள் கேட்கும் பணத்தை கொடுத்துவிட்டால், உங்கள் செல்லப்பிராணி உங்களுக்கு கிடைத்துவிடும் என்று தொலைபேசியில் பேசும் ஒருவர் கூறுவார்.

செல்லப்பிராணி காணாமல் போனதும், அதன் உரிமையாளர், சமூக ஊடகங்களில் அதைக் குறித்த விவரங்களை அளித்திருப்பார்.

அதை அப்படியே திருப்பிச் சொல்லும் மர்ம நபர்கள், உண்மையாகவே அந்த செல்லப்பிராணி தங்களிடம் இருப்பது போலவே நம்ப வைத்துவிடுவார்கள். ஆனால் உண்மையில் அவர்களிடம் அந்த செல்லப்பிராணி இருக்காது.

செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள், எப்படியாவது தங்கள் செல்லப்பிராணி கிடைத்தால் போதும் என்று எண்ணி பணத்தை அனுப்பியபிறகு, தொலைபேசியில் அழைத்தவர்களை தொடர்பு கொள்வது இயலாத காரியமாகிவிடும்.

இதுவரை கிட்டத்தட்ட 50 பேர் இந்த மோசடியாளர்களிடம் ஏமாந்திருக்கிறார்கள். எனவே இப்படி மோசடி செய்பவர்களை நம்பி ஏமாறவேண்டாம் என அரசின் செல்லப்பிராணிகள் தொடர்பான துறை ஒன்று எச்சரித்துள்ளது.

ஆனால், இப்படி மோசடி செய்வோர் சிக்கினால், அவர்களுக்கு 375,000 யூரோக்கள் வரை அபராதம் காத்திருக்கிறது என்பது மட்டும் நிஜம்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்