தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் கைகோர்க்கும் பிரான்ஸ்

Report Print Fathima Fathima in பிரான்ஸ்

தீவிரவாதத்துக்கு எதிராக பிரான்சும்- இந்தியாவும் ஒருங்கிணைந்து செயல்பட உறுதியேற்றுக் கொண்டதாக பாதுகாப்பு துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக பிரான்ஸ் சென்றுள்ளார்.

அங்கு முதல் ரபேல் விமானத்தை பெற்றுக்கொண்ட நிலையில், இந்தியா- பிரான்ஸ் இடையேயான பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது.

ராஜ்நாத் சிங், பிரான்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சர் புளோரன்ஸ் பார்லியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதுதொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், இருநாடுகளுக்கிடையே பாதுகாப்பு துறையில் நிலவி வரும் ஒத்துழைப்பு குறித்து இரு நாட்டு அமைச்சர்களும் ஆய்வு செய்தனர்.

தீவிரவாதத்துக்கு எதிராகவும் ஒருங்கிணைந்து செயல்படவும், ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் உறுதியேற்றுக் கொண்டனர்.

அத்துடன் இருநாட்டு ராணுவப் படைகளுக்கிடையே நடைபெற்று வரும் கூட்டுப்பயிற்சிகளான ‘சக்தி’, ‘வருணா’, ‘கருடா’ ஆகியற்றை மேலும் விரிவாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் அவா்கள் விவாதித்தனா் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ANI

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்