பாரிசில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தீயணைப்பு வீரருக்கு நேர்ந்த பரிதாபம்!

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்சின் பாரிஸ் நகரில் தீயணைப்பு படையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது ஒருவர் கண்களில் பலத்த காயமடைந்தார்.

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில், தீயணைப்பு படையினர் பலர் சம்பள உயர்வு கோரியும், பணியில் ஈடுபடும்போது தங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பலர் பட்டாசுக்களை கொழுத்தி வீசியதால் வன்முறை வெடித்துள்ளது. இதனால் பொலிசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர். இதில் Cote-d'Or நகரைச் சேர்ந்த 50 வயது தீயணைப்பு வீரர் ஒருவர், கண்களில் பலத்த காயமடைந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, அவர் உடனடியாக பாரிசில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது கண்களில் வெடிமருந்து அல்லது கண்ணீர்புகை பட்டுள்ளதால், மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

மேலும், அவர் கண்களை இழக்கும் அபாயத்தில் உள்ளார் என தொழிற்சங்க இயக்குனர் தெரிவித்துள்ளார். எனினும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இதுதொடர்பாக தொழிற்சங்கம் தரப்பில் கூறுகையில்,

‘காவல்துறையினர் கண்ணீர் புகையினை அளவு கணக்கில்லாமல் மழை கொட்டுவது போல் கொட்டித் தள்ளியுள்ளனர்’ என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

AFP

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்