அமெரிக்க இரட்டைக்கோபுர தாக்குதல் போல் மற்றொரு தாக்குதல் திட்டம்: வெளியான அதிர்ச்சி தகவல்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

அமெரிக்காவில் நியூயார்க் இரட்டைக்கோபுரங்கள் மீது விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதுபோன்ற மற்றொரு தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்ஸ் உள்துறை அமைச்சரான Christophe Castaner, அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலால் ஈர்க்கப்பட்ட ஒருவர், அதே போன்ற தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாகவும், அவரை பிரான்ஸ் உளவுத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

9/11 தாக்குதல்கள் என அழைக்கப்படும், உலக வர்த்தக மையம் அமைந்திருந்த இரட்டைக்கோபுரங்கள் மீது தீவிரவாதிகள் விமானங்களை மோதி வெடிக்கச் செய்ததுபோல ஒருவர் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததை உளவுத்துறை முறியடித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

Christophe Castaner

அந்த நபர் ஐரோப்பாவில் ஒரு விமானத்தை கடத்த திட்டமிட்டிருந்ததாகவும் Christophe தெரிவித்தார்.

பிரான்ஸ் ஊடகங்கள் கைது செய்யப்பட்டுள்ள அந்த நபர் 30 வயதுக்கு குறைந்த வயதுடையவர் என்றும், மத்திய பாரீஸுக்கு மேற்கில் அமைந்துள்ள Hauts-de-Seine என்ற பகுதியில் வசித்துவந்தவர் என்றும் தெரிவிக்கின்றன.

பிரான்சில் கட்டுப்பாடுகள் அதிகம் என்பதால், மற்றொரு ஐரோப்பிய ஒன்றிய நாட்டில் அவர் தாக்குதல் நடத்தவும் திட்டம் வைத்திருந்ததாகவும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி, நியூயார்க்கின் உலக வர்த்தக மையத்தின் இரண்டு கட்டிடங்கள் மீது தீவிரவாதிகள் விமானங்களை மோதி தாக்கியதில், அந்த கட்டிடங்கள் நொறுங்கி சிதைந்ததை மறக்க முடியாது.

அமெரிக்கா எதிர்கொண்ட அந்த பயங்கர தீவிரவாத தாக்குதலில் 2,753பேர் உயிரிழந்தார்கள்.


மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்