பலத்த பாதுகாப்பான ராணுவ அமைச்சகத்தில் கொழுத்தப்பட்ட வாகனம்.. பாரிசில் பரபரப்பு!

Report Print Kabilan in பிரான்ஸ்

பாரிசில் உள்ள ராணுவ அமைச்சகத்தில் நின்றுகொண்டிருந்த வாகனம் ஒன்று எரியூட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ராணுவ அமைச்சகம் உள்ளது. இது அமைந்துள்ள பகுதியான Porte de Versaillesயின் Avenue d'lssy இடத்தில் வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது.

இப்பகுதி பலத்த பாதுகாப்பின் கீழ் இருக்கும், கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டிருக்கும் பகுதி ஆகும். இந்நிலையில், நேற்றைய தினம் அதிகாலையில் Avenue d'lssy-யில் நிறுத்தப்பட்டிருந்த குறித்த வாகனத்தை மர்ம நபர்கள் தீயிட்டு கொழுத்தியுள்ளனர்.

அவர்கள் பெட்ரோல் எரிகுண்டை வீசி இந்த வாகனத்தை கொழுத்தியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உடனே விரைந்து வந்த தீயணைப்பு படையினர், கொழுத்தப்பட்ட வாகனத்தின் தீயை அணைத்தனர்.

இதனைத் தொடர்ந்து இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாகனத்தை அகற்றி, இதுதொடர்பான தடயங்களை சேகரித்தனர்.

அதனைத் தொடர்ந்து Parc des Expositions என்ற பூங்கா ராணுவ அமைச்சகத்திற்கு அருகில் அமைந்துள்ளதால், அங்கிருந்து இச்செயலை மர்ம நபர்கள் மேற்கொண்டிருக்கலாம் என்று பொலிசார் தெரிவித்தனர்.

எனினும், இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்