உணவை குப்பைத்தொட்டியில் போட்ட நிறுவனம் மீது வழக்கு!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

நாடே உணவை வீணாக்குவதை எதிர்க்கும் நாளைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் நிலையில் உணவை குப்பைத்தொட்டியில் போட்ட பிரபல நிறுவனம் ஒன்றின் மீது வழக்கு தொடரப்பட இருக்கிறது.

பாரீஸின் புறநகர்ப்பகுதியான Courbevoie பகுதியில் அமைந்துள்ள பிரபல பல்பொருள் அங்காடி ஒன்றின் வெளியே உணவு குப்பைத்தொட்டியில் கொட்டப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்த நகர கவுன்சிலர் ஒருவர், அந்த நிறுவனம் மீது வழக்கு தொடர இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதிகாரி ஒருவர் முன்னிலையில் குப்பைத்தொட்டி ஒன்றிலிருந்து ரொட்டி, இரால், சீஸ் மற்றும் சாலட் பாக்கெட் ஒன்று ஆகியவற்றை அவர் கண்டெடுத்தார்.

அப்போது வீடில்லாமல் சாலையில் தங்கும் ஒருவரும், தனக்கும் அந்த குப்பைத்தொட்டியிலிருந்து போதுமான உணவு கிடைத்ததாக தெரிவித்தார்.

பிரான்சின் வேளாண்மைத்துறை, ஆண்டுதோறும் 12 முதல் 20 பில்லியன் யூரோக்கள் அளவிற்கு உணவு வீணாக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

ஆண்டுதோறும் 10 மில்லியன் டன் உணவுப்பொருட்கள் வீணாகுவதாக, அது கணக்கிட்டுள்ளது.

ஆனால், அந்த நிறுவனத்தைச் சார்ந்த ஒருவர், தரையில் விழுந்த உணவு, முட்டையால் செய்யப்பட்ட உணவு மற்றும் ஒரு வாடிக்கையாளர் குளிர்பதனப்பெட்டியிருந்து வெளியே எடுத்துவிட்டு, மீண்டும் உள்ளே வைக்காத உணவு ஆகிய மூன்று வகை உணவுகளையும் மீண்டும் பயன்படுத்தமுடியாது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்