பிரெக்சிட்: முரண்டு பிடிக்கும் ஒரே நபர் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரெக்சிட்டை நிறைவேற்றுவதற்கு பிரித்தானியா மூன்று மாதங்கள் தவணை கேட்டிருந்த நிலையில், மற்ற உறுப்பு நாடுகள் அனைத்தும் அதற்கு சம்மதித்து விட்டாலும், பிரான்ஸ் மட்டும் முரண்டு பிடித்து வருகிறது.

இம்மாதம் (அக்டோபர்) 31 ஆம் திகதி, பிரெக்சிட் நிறைவேற்றப்படுவதாக திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பிரித்தானியா நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரது நடவடிக்கையால் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் பிரெக்சிட்டை நிறைவேற்றுவதற்கு மூன்று மாதங்கள் தவணை கேட்க வேண்டிய ஒரு சூழல் ஏற்பட்டது.

எனவே போரிஸ் ஜான்சன் தவணை கோரி கடிதம் ஒன்றை அனுப்ப, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் 26 நாடுகளும் அதற்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், பிரான்ஸ் மட்டும் ஒப்புதல் அளிக்க முரண்டு பிடித்து வருகிறது.

ஐரோப்பிய ஒன்றிய தூதரக அலுவலர் ஒருவர் கூறும்போது, மற்ற நாடுகள் எவ்வளவோ கூறியும் பிரான்ஸ் அதை ஏற்க மறுக்கிறது.

பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான், போரிஸ் ஜான்சனால் தனது ஒப்பந்தத்தை பிரித்தானிய நாடாளுமன்றம் ஏற்றுக்கொள்ளும்படி செய்யமுடியாவிட்டால், ஒரு தேர்தல் நடைபெறவில்லையென்றால், கொடுத்த மூன்று மாத தவணை வீணாகப்போய்விடும் என்றே கூறிவருகிறார்.

பிரித்தானியா பொதுத்தேர்தல் குறித்து என்ன முடிவெடுக்கிறது என்பதை விளக்கும் வரை பொறுத்திருப்போம் என்கிறார் அவர்.

மற்ற உறுப்பு நாடுகள், அது பிரித்தானியாவின் உள்நாட்டு அரசியல், அதில் நாம் தலையிட வேண்டாம் என்று கூறியும், முரண்டு பிடித்துவருகிறார் மேக்ரான்.

இதனால், எதிர்பாராமல், ஒப்பந்தங்கள் எதுவும் செய்யப்படாமலேயே பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறும் ஒரு சூழல் ஏற்பட்டுவிடும் அபாயம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்