பிரான்சில் வசிக்கும் வயதான பெண்மணி : சமையலறையில் கிடந்த ஓவியத்தால் அடித்த அதிர்ஷ்டம்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சில் வயதான பெண்மணி ஒருவர் வீட்டு சமையலறையில் தொங்கிக்கொண்டிருந்த ஒரு பழங்கால ஓவியம், அவரை இந்த வயதில் கோடீஸ்வரியாக்கியுள்ளது.

அவர் அதை மதம் தொடர்பான ஏதோ ஒரு ஓவியம் என்றுதான் நினைத்திருந்தார். ஆனால் சமீபத்தில் அந்த ஓவியம் மிகவும் விலையுயர்ந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அடிக்கப்படுவதற்கு முன் அவரை மக்கள் அவமதிக்கும் Christ Mocked என்ற அந்த ஓவியத்தை வரைந்தவர், பிரபல இத்தாலிய ஓவியரான Cimabue.

இவர் 13ஆம் நூற்றாண்டின் இறுதி மற்றும் 14ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சிறந்து விளங்கியவர்.

ஆதையால் இந்த ஓவியம் சுமார் 600 ஆண்டுகள் பழமையானது என்று கருதப்படுகிறது. முதலில் இந்த ஓவியத்துக்கு ஆறு மில்லியன் பவுண்டுகள் ஏலத்தில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

AFP/GETTY IMAGES

ஆனால், அனைவரின் எதிர்பார்ப்பையும் மீறி இந்த ஓவியம் நான்கு மடங்கு அதிகமாக ஏலத்தில் போனது.

பிரான்சின் Compiègne நகரில் உள்ள ஒரு வீட்டின் சமையலறையில் இந்த ஓவியம் பல ஆண்டுகளாக கவனிப்பாரின்றி தொங்கிக் கொண்டிருந்தது.

ஒரு நாள், அந்த பகுதியில் பழைய பொருட்களை ஏலத்தில் விடுபவர் ஒருவர் அந்த ஓவியத்தை கவனித்து, வீட்டின் உரிமையாளரான பெண்ணிடம், அந்த ஓவியத்தை ஆய்வு செய்வதற்காக நிபுணர்களிடம் தரும்படி கேட்டுக்கொண்டார்.

தற்போது அந்த ஓவியம், 24 மில்லியன் பவுண்டுகளுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு,வயதான இந்த காலத்தில் அந்த பெண்மணியை கோடீஸ்வரியாக்கியுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்