நோர்து-டேம் தேவாலயத்திற்கு முன் உள்ள கட்டிடத்தில் தீ.. ஏராளமான பொருட்கள் நாசம்!

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்சின் நோர்து-டேம் தேவாலயத்திற்கு முன்னால் உள்ள கட்டிடம் ஒன்று தீ விபத்துக்குள்ளானது.

நோர்து-டேம் நகரின் rue des Bernardins வீதியில் உள்ள தங்குமிடம் ஒன்று தீ விபத்துக்குள் சிக்கியுள்ளது. தேவாலயத்திற்கு முன்பு உள்ள இந்த கட்டிடம் பழங்காலத்து தங்குமிடம் எனவும், நான்கு அடுக்குகள் கொண்ட கட்டிடம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை 10 மணியளவில் பரவிய தீ, கட்டிடத்தின் கூரைப்பகுதியை வெகுவாக எரித்திருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த விபத்தில் எவரும் காயமடையவில்லை என்றும், ஏராளமான பொருட்கள் எரிந்து சாம்பலாகியுள்ளதாகவும் தீயணைப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான முதற்கட்ட தகவலின்படி, மின் ஒழுங்கு காரணமாக தீ பரவியுள்ளது என்று அறிய முடிகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்