பிரான்ஸ் மசூதியில் சரமாரி துப்பாக்கிச் சூடு.. தாக்குதல் நடத்திய மர்ம நபர் குறித்து வெளியான முக்கிய தகவல்

Report Print Basu in பிரான்ஸ்

பிரான்ஸில் உள்ள மசூதி ஒன்றில் நபர் ஒருவர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்மேற்கு நகரமான பேயோனில் உள்ள மசூதியிலே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கியுடன் வந்த மர்ம நபரின் மசூதியின் கதவை நோக்கி சரமாரியாக துப்பாகிச் சூடு நடத்தியுள்ளான்.

அவனை தடுக்க முயன்ற இரண்டு நபர்க்ள மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளான். தாக்குதலில் காயமடைந்த இருவரையும் பேயோனில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

அவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளனர் என அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, தென்மேற்கு பிரான்சில் உள்ள Landes என்ற பகுதியில் உள்ள அவரது வீட்டில் போலீசார் தாக்குதல்தாரியை பொலிசார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் 80 வயதுடையவர் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நபர் தீவிர வலதுசாரிகளுடன் தொடர்பு கொண்டிருந்தார் மற்றும் Landes-ல் 2015ல் நடந்த தேர்தலில் Rassemblement National வேட்பாளராக நின்றார என அக்கட்சிஅறிக்கையில் உறுதிப்படுத்தியது.

Rassemblement National-ன் மதிப்புகள் மற்றும் அரசியல் கோட்டிற்கு முரணானதாக கருத்துக்களை வெளியிட்டதற்காக, 2015 தேர்தலைத் தொடர்ந்து அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்