பிரான்சில் நடமாடும் போலி பொருட்கள்: ஒரு எச்சரிக்கை செய்தி!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

கடந்த ஆண்டில் மட்டும் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான போலி பொருட்கள் பிரான்சில் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.

அறிவுசார் பொருட்கள் திருட்டு, பிரான்ஸ் நாட்டு பிரச்னை மட்டும் அல்ல, அது ஒரு சர்வதேச பிரச்னையாக உள்ளது.

ஆனால், அமெரிக்க பொருட்களுக்கு அடுத்தபடியாக அதிகம் போலியாக தயாரிக்கப்படும் பொருட்கள் பிரான்சில்தான் நடமாடுகின்றன.

போலி பொருட்கள் என்பவை, ஒரு புகழ் பெற்ற நிறுவனத்தின் தயாரிப்புகளை போலியாக தயாரிப்பதும், சில நேரங்களில், தயாரிப்பின் பெயரில் ஒரு எழுத்தை மட்டும் மாற்றிவிட்டு, ஆனால் பார்ப்பதற்கு அந்த பிரபல நிறுவனத்தின் பொருளைப்போலவே காணப்படும் உறைகளுடன் கூடிய பொருட்களை தயாரிப்பதும் ஆகும்.

ஆடம்பர கைப்பைகள் முதல், அன்றாடம் மக்கள் பயன்படுத்தும் மருந்துகள் வரை போலிக்கு பஞ்சமேயில்லை.

அதிகம் நடமாடும் போலிப்பொருட்கள், வாசனை திரவியங்கள் மற்றும் ஆடம்பர கைக்கடிகாரங்கள், கால் பந்து சட்டைகள், கைவினைப்பொருட்கள், காலணிகள் உள்ளிட்ட பல பொருட்கள்.

இப்பொருட்கள் எப்படி கடைகளில் கிடைக்கின்றனவோ, அதேபோல, ஒன்லைனிலும் கிடைக்கின்றன என்பது உண்மையிலேயே மோசமான செய்திதான்.

எப்படி போலி பொருட்களை தயாரித்து விற்க தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறதோ, அதேபோல, தங்கள் நிறுவன தயாரிப்புகள் போல தயாரிக்கப்படும் போலிகளை தவிர்க்கவும் நிறுவனங்கள் உயர் தொழில்நுட்பங்களை பயன்படுத்தவேண்டியுள்ளது.

இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் வீடியோ, பிரான்சில் நடமாடும் போலி பொருட்கள் குறித்தும் அவற்றை தவிர்க்க அதிகாரிகள் எவ்விதம் நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பதையும் விவரிக்கிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்