பிரெஞ்சு உணவுப்பிரியர்களை கொந்தளிக்க வைத்த அமெரிக்க நாடாளுமன்றம்: என்ன செய்தது தெரியுமா?

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரெஞ்சு உணவு ஒன்றிற்கு நியூயார்க் நாடாளுமன்றம் தடை விதித்துள்ள செய்தி, பிரான்ஸ் நாட்டவர்களை கொந்தளிக்கச் செய்துள்ளது. Foie gras என்பது பிரான்ஸ் நாட்டவர்களால் அதிகம் விரும்பி உண்ணப்படும் ஒரு உணவாகும்.

2018ஆம் ஆண்டில் மட்டும் 18,000 டன் foie gras பிரான்சில் தயாரிக்கப்பட்டுள்ளதிலிருந்து, அது எவ்வளவு பிரபலம் என்பதை புரிந்துகொள்ளலாம். உலகம் முழுவதிலும் உண்ணப்படும் foie grasஇல் சுமார் 80 சதவிகிதம் பிரான்சில் தயாரிக்கப்படுவதுதான்.

அப்படியிருக்கும் நிலையில், நியூயார்க் நாடாளுமன்ற உறுப்பினர்கள், 2022ஆம் ஆண்டிலிருந்து foie gras விற்கப்படுவதற்கு தடை விதிப்பதற்கு ஆதரவாக பேராதரவுடன் வாக்களித்துள்ளார்கள்.

அதாவது, foie gras என்பது என்னவென்றால், வாத்துக்களுக்கு, குழாய் மூலம் அதிக அளவு மக்காச்சோளத்தை உணவாக கொடுத்து, (அல்லது வலுக்கட்டாயமாக திணித்து என்றும் சொல்லலாம்) வாத்துக்களின் ஈரலை சீக்கிரமாக கொழுக்கச் செய்து, அந்த ஈரலை பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவுதான் foie gras! ஆகவேதான், அதற்கு எப்போதுமே விலங்குகள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

AFP

நியூயார்க் நாடாளுமன்ற உறுபினர்களும் இதையே காரணமாக கூறித்தான் foie grasஐ தடை செய்ய வாக்களித்துள்ளார்கள்.

ஆனால், foie gras அமெரிக்காவில் உண்ணப்படும் ஒரு உணவு அல்ல. ஆகவே, அவர்கள் அதை தடை செய்வதால் பிரெஞ்சு ஏற்றுமதியாளர்களுக்கு அது நஷ்டத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை.

என்றாலும், தங்கள் உணவு கலாச்சாரத்தின் ஒரு அடையாளமாக திகழும் ஒரு உணவு வகையை அமெரிக்கா தடை செய்யவிருப்பதால்தான், அது பிரெஞ்சு மக்களை கொந்தளிக்கச் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அது தங்களுக்கு இழைக்கப்படும் அவமானமாக பிரான்ஸ் மக்கள் கருதுகிறார்கள்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்