ஐ.எஸ் ஜிகாதிகளால் கொல்லப்பட்ட பிரான்ஸ் ராணுவ வீரரின் புகைப்படம் வெளியானது

Report Print Basu in பிரான்ஸ்

மாலி நாட்டில் கொல்லப்பட்ட பிரான்ஸ் ராணுவ வீரரின் புகைப்படம் மற்றும் அவர் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இத்தாக்குதலுக்கு ஐ.எஸ் குழு பொறுப்பேற்றுள்ளது.

வேலன்ஸில் உள்ள பிரான்ஸ் ராணுவத்தின் 1 வது Spahi Regiment-ச் சேர்ந்த 24 வயதான Ronan Pointeau, மெனகாவின் வடகிழக்கு பிராந்தியத்தில், அவரது வாகனம் வெடிக்கும் கருவியால் தாக்கப்பட்டதால் இறந்தார் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.ஷ

ராணுவ வீரரின் தியாகத்தை பாராட்டிய பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், சஹேல் மாகாணத்தில் பயங்கரவாதத்திற்கு எதிராக போராடி வரும் பிரான்ஸ் ராணுவ தோழர்களக்கும், சஹேலிய படைகளின் சகோதரர்களுக்கும் அவரது எண்ணங்களை வெளிப்படுத்தினார்.

euronews

மாலியன் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக விரைவில் மாலிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் Florence Parly கூறியுள்ளார்.

வெள்ளிக்கிழமை, அதே பிராந்தியத்தில் பயங்கரவாத தாக்குதலில் 49 மாலியன் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கும் ஐ.எஸ் குழு பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்